தமிழில் பெரிய டைரக்டர் என்று பெயரெடுத்த கெளதம் மேனனின் பெரிய வெற்றிப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்தப்படத்திற்கு பிறகு அஜித்தின் துப்பறியும் ஆனந்த் படம் செய்வதாக சொல்லப்பட்டது, ஆனால் இதற்கிடையே கெளதம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ஆரம்பித்தார் கெளதம்.
அஜித்திடம் இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்குவதாக தெரிவித்திருக்கிறார் கெளதம். ஆனால் அஜித் ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே என்ற நிலையில் ரொம்ப வருடங்களாகவே இருந்து வருகிறது. நடிகரே இப்படி இருக்கும் போது இயக்குனர் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் செய்வது சரியாக இருக்காது என்று அவருக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாத கெளதம் மேனன் அஜித்தை வசைமாறிப்பொழிய ஆரம்பித்தார். அஜித் எதும் சொல்லாமல் வெங்கட் பிரபுவுடன் மங்காத்தாவை ஆரம்பித்து கிளம்பிவிட்டார்.
மங்காத்தாவில் நடிக்கிறார் என்பதற்காக ஹிந்தி விண்ணைத்தாண்டிவருவாயா படத்தில் இருந்தும், சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தில் இருந்தும் நீக்கப்பட்டார் திரிஷா. ஹிந்தி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவுக்கு பதில் மதராஸ்ப்பட்டிணம் புகழ் எமி ஜாக்சனை புக் பண்ணி இருந்தார் கெளதம்.
ஆனால் ஹிந்தி படத்திற்கு பாப்பர் என்ற முண்ணனி நாயகனை கதாநாயகனாக நடிக்க வைக்க இருந்தார் கெளதம். ஆனால் அவர் வேறு படங்களின் பிஸியாக இருப்பதால் இவரின் படத்திற்கு இப்போதைக்கு தேதி தரும் நிலையில் இல்லை என்று கை விரித்துவிட்டார் பாப்பர். மேலும் எமிக்கு இந்திய பெண்களுக்குரிய பாவம் எதுவுமே வரவில்லை, எவ்வளவு முயற்சித்தும் தோல்வியே கிடைத்திருக்கிறது கெளதமுக்கு. வேறு வழியில்லாமல் படத்திற்கு வேறு நாயகனோ, நாயகியோ தேடி ஆரம்பிப்பது முடியாத காரியம் என்பதால் படத்தை கைவிட்டார் கெளதம். இப்போதைக்கு அவருக்கு நடுநிசி நாய்கள் மட்டுமே கையில் இருக்கும் படம்
No comments:
Post a Comment