'மங்காத்தா'வில் தாடியுடன் வரும் அஜித்!
சென்னையில் நடந்த 'மங்காத்தா' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டார் இயக்குநர் வெங்கட் பிரபு. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் என்பதால் விரைவில் மும்பை செல்ல திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. மும்பையில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதியான தாராவியில் குறிப்பிட்ட சில காட்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறதாம். இந்தப் பகுதியை எடுத்துவிட்டால் கிட்டத்தட்ட படமே முடிந்தமாதிரி. மார்ச் முதல் வாரத்தில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கிவிடுமாம். ரஜினியைபோல உண்மையை மறைக்காமல் தனது சுய தோற்றத்தோடு வெளியே வருபவர் அஜித். 'மங்காத்தா' யூனிட்டில் அஜித், இயக்குநர் வெங்கட் பிரபு என பலரும் தங்கள் ஆப்பிள் ஒயிட் தாடியுடன் காணப்படுகிறார்கள். வெஸ்டர்ன் நாடுகளில் அங்கே தாடிகளில் ஒயிட் எட்டிப்பார்த்தால் முன்பெல்லாம் ரெட் அல்லது கோல்ட் கலரிங் செய்து கொள்வார்கள். இப்போது கலரிங் எதுவும் செய்யாமல் அப்படியே ஒயிட்டாக விட்டுவிடுவதுதான் இப்போது அங்கேயும் ஃபேஷன். இந்த ஃபேஷன் இப்போது அஜித் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது. எத்தனை தல ரசிகர்கள் கறுப்பு தாடியிலும் தலைமுடியிலும் வெள்ளை நிறத்தை பூசிக்கொள்வார்களோ? 'மங்காத்தா' படத்திலும் த்ரிஷாவுடன் நடிக்கும் காட்சிகளில் இப்படி தனது நரைத்துப் போன முடி மற்றும் தாடியுடன் வருகிறாராம் அஜித்! 'தல'க்கு தலைமேல எல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்லையாக்கும்
No comments:
Post a Comment