DEDICATED TO BELOVED FANS OF THALA AJITH KUMAR

Thursday, February 24, 2011

அஜீத் - விஜய் இணையும் ஆக்ஷன் படம்



















ஓ.
கே... கோலிவுட்டில் இப்போது 'மோஸ்ட் வான்டட்’ எதிர்பார்ப்பில் இருக்கும் படம் *'மங்காத்தா’! சில வருடங்களாகவே சீரியஸ் தொனி படங்களில் நடித்து வரும் அஜீத், வேண்டி விரும்பி வெங்கட் பிரபுவின் காமெடி ட்ரீட்மென்ட் திரைக்கதையைத் தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டு இருக்கிறார். 'தல’ ஹீரோ, 'வாலு’ டைரக்டர் என்ற வித்தியாச காம்பினேஷன் நிச்சயம் அஜீத் ரசிகர்களை உற்சாகமூட்டும். பரபரவென முன்னேறி வரும் படப்பிடிப்பு கூடாரத்தினுள் எட்டிப் பார்த்ததில் இருந்து...
*அஜீத் - த்ரிஷா இடையே முத்தக் காட்சி ஒன்று அவசியம் என்று ஒற்றைக் காலில் நின்றிருக்கிறார் வெங்கட் பிரபு. முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் த்ரிஷா ஓ.கே சொல்ல, அஜீத்துக்கோ ஏகத் தயக்கம். *'அவசியமா... கட்டாயம் வேண்டுமா? உறுத்தலா இருந்துராதே!’ என்று பலமுறை கேட்டுச் சமாதானமான பிறகுதான் இசைந்திருக்கிறார் அஜீத். மிக நெருக்கமான அந்த முத்தக் காட்சி நாலு டேக்குகள் வரை நீண்டது.
'எல்லோரும் கெட்டவன்னா, இவன் ரொம்பக் கெட்டவன்!’ படத்தில் அஜீத்துக்கான பஞ்ச் லைன் இது.
* 'மங்காத்தா’ - 'வேலாயுதம்’ படப்பிடிப்பு இடைவேளைகளில் அஜீத் - விஜய் சந்தித்துக் கொண்டபோது, 'மங்காத்தா’வில் அர்ஜுன் கேரக்டர் பற்றி விஜய்யிடம் விவரித்திருக்கிறார் வெங்கட் பிரபு. 'அட, செம கேரக்டருங்க... எனக்கே அதைப் பண்ண ஆசையா இருக்கு!’ என்று வாய்விட்டு ஆதங்கப்பட்டு இருக்கிறார் விஜய்
* ' 'கில்லி’ படத்துல உங்க காமெடி பார்க் குறப்போ இப்பவும் நான் சிரிச்சுட்டு இருப்பேன். இந்தப் படத்துல அந்த அளவுக்கு காமெடி பண்ண ஸ்கோப் இருக்குற கேரக்டர். செமத்தியா ஹோம்வொர்க் பண்ணிட்டு இருக்கேன். என்னோட அல்ட்டிமேட் காமெடி படமா இது இருக்கும்!’ என்று அப்போது விஜய்யிடம் கூறி இருக்கிறார் அஜீத். 'ஆஹா.... அது ஒண்ணுதான் நம்ம டிபார்ட்மென்ட். அதுலயும் போட்டிக்கு வந்துட்டீங்களா!’ என்று ஜாலியாகக் கலாய்த்து இருக்கிறார் விஜய்.
* ரஜினியின் ஹிட்டான 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை!’ பாடலின் சில வரிகளை ரீ-மிக்ஸி ஒரு பாடல் துவங்குகிறது. தொடர்ந்து 'அம்பானி பரம்பரை... அஞ்சாவது தலைமுறை... ஆனந்தம் ஒருமுறைதான்!’ என்று அஜீத் பாணிக்கு மாறுகிறது பாடல்.
படத்தில் அஜீத்தின் கேரக்டர் பெயர் டைரக்டருக்கே தெரியாத சஸ்பென்ஸ். காரணம், அவருக்கே தெரியாதே! இன்னும் அஜீத் கேரக்டருக்குப் பெயர் சூட்டப்படவில்லை!
அஜீத் - விஜய் இடையேயான நட்பு இறுக்கமாகி இருக்கிறது. எந்த அளவுக்கு இறுக்கம் என்றால், இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கலாம் என்று முடிவு எடுக்கும் அளவுக்கு! 'மங்காத்தா’ பட பப்ளிசிட்டி சமயம், இந்தத் தகவலைத் தெரிவிக்கலாம்  என்று ரகசியம் காக்கிறார்களாம்!
இருவரையும் இணைத்து இயக்குவது..? வெங்கட் பிரபு! இவர் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்த டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை அஜீத்- விஜய் இருவரிடமும் சொல்லி இருக்கிறார். அவர்களுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. 'எனக்கு அந்த கேரக்டர்!’ 'எனக்கு இந்த கேரக்டர்!’ என்று மல்லுக்கட்டத் துவங்கியிருக்கிறார்கள். அரண்டு போன வெங்கட், 'அதுக்குள்ள ஏன் அவசரம்? இன்னும் நான் ஸ்க்ரீன்ப்ளே சரி பண்ணிக்கிறேன்!’ என்று கூறியிருக்கிறாராம்.
'அமிதாப், தர்மேந்திரா சேர்ந்து நடிச்ச 'ஷோலே’ இந்திய சினிமாவில் மைல்கல். அது மாதிரி ஒரு படத்தில் நடிக்க ஆசை. பவர்ஃபுல் ஆக்ஷன் சேருங்க, கலர்ஃபுல் காதல் சேருங்க, சியர்ஃபுல் காமெடி சேருங்க!’ என்று வெங்கட் பிரபுவின் தோள் தட்டி அனுப்பி இருக்கிறார்கள் இருவரும்!

No comments:

Post a Comment