பாங்காங்கில், "விளையாடு மங்காத்தா" என்ற அஜீத்தின் அறிமுகப் பாடலை எடுத்து முடித்திருக்கும் மங்காத்தா டீம் இப்போது ஹைதராபாத்தில் இறங்கியுள்ளது. இது மிக நீண்ட ஷெடியூல்லாக இருக்குமாம். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கே படமாக்க இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
படத்தில் நாகர்ஜூனுக்கு பதிலாக அர்ஜூன் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இப்போது நடக்க இருக்கிற நீண்ட நாள் படப்பிடிப்பில் அஜீத், திரிஷா உட்பட அர்ஜுன், வைபவ், ப்ரேம்ஜி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
மங்காத்தா படத்தின் மூன்று பாடல்களை கேட்ட அஜீத், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் முழு திருப்தி அடைந்திருக்கிறார். இன்னும் மூன்று பாடல்களை இந்த மாதம் முடிக்க இருக்கிறார் யுவன். வானம் படத்தின் பாடல்கள் ஹிட்டாகி இருப்பதில் யுவனுக்கு சந்தோஷம். அவன் இவன் படத்துக்காக வித்யாசமான இசையை கொடுத்து வருகிறார் யுவன். ஆதிபகவன் படத்துக்கும் இசை அமைத்து வருவதால் யுவன் இந்த மாதம் செம பிஸி..
No comments:
Post a Comment