கமல் படத்தில் முதல் காட்சியிலேயே நடிகர் சூர்யாவும் திரிஷாவும் ஆட்டம் போடும் போது இது தமிழ்படம்தானா? என்ற ஆச்சர்யங்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன..ஒரு பெரிய நடிகர் படத்தில் வளர்ந்து வரும் ஒரு நடிகர் ஈகோ பார்க்காமல் நடித்து இருப்பது பாராட்டுக்குறியது.
பெரிய எதிர்பார்ப்புகள்பெரிய விளம்பரம், பெரிய பரபரப்பு இல்லாத கமல் படம்.பொதுவாக தமிழ் திரைபடங்கள் வெள்ளிக்கிழமை ரிலிஸ் செய்வார்கள். இந்த படம் வியாழக்கிழமை அன்றே ரிலிஸ் செய்து இருக்கின்றார்கள்...
ஒரு நடிகையை சமுகம் எப்படி பார்க்கின்றது என்பதை காமெடியோடு சொல்லி இருக்கின்றார்கள்..
மன்மதன் அம்பு படத்தின் கதை என்ன??
திரிஷா பிரபல நடிகை, அவரை பணக்கார மாதவன் காதலிக்கின்றார்..மாதவனுக்கு சந்தேக புத்தி.. மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பாரிஸ் கிளம்பி செல்கின்றார் நடிகை திரிஷா.. மாதவனுக்கு திரிஷாவுக்கு யாராவது பாய்பிரண்ட் இருப்பார்களோ என்று சந்தேகபட்டு திரிஷாவை வேவு பார்க்க மேஜர் கமலை அனுப்புகின்றார்...நிறைய நெகிழ்ச்சி மற்றும் குழப்பங்களுக்கு விடை கண்டு படம் இனிதே நிறைவடைகின்றது.
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
கமலின் என்ட்ரி இருக்கின்றது பாருங்கள்.. வேட்டையாடு விளையாடுக்கு அப்புறம் எனக்கு இந்த படத்தின் கமல் என்ட்ரி பிடித்து இருக்கின்றது.. காரணம் ஹுஸ் த ஹீரோ சாங்கோடு கமல் என்ட்ரியால்எனக்கு அது பிடித்து இருக்கலாம்...
நீ நீல வானம் பாட்டில் எல்லா நிகழ்வுகளும் ரிவர்சில் போவது போலான புதிய முயற்ச்சியை செய்து இருக்கின்றார்...
கமல் தகிடுதத்தம் பாடலுக்கு சோலோவாக போடும் ஒரு டான்ஸ் ...1980 மற்றும் 1970 கமலை நினைவு படுத்துகின்றன...
படத்தில் ஒரு கப்பலை காட்டி இருக்கின்றார்கள்.. அது படம் பார்க்கும் தமிழ் ரசிகனுக்கு புதிய விஷயம்.. ஏற்க்கனவே பல ஆங்கிலபடங்களில் பார்த்து இருந்தாலும் இந்த படம் தமிழில் பிரமாண்டம்தான்..
இந்த படம் ஹாலிவுட் படமான தேர் ஈஸ் சம்திங்க அபவுட் மேரி என்று ஒரு சிலரும் ஒரு சிலர் வேறு சில படங்களின் தழுவல் என்று சொல்கின்றார்கள்..
திரிஷா சூர்யாவோடு ஆடும் பாடலோடு வேறு எந்த ஆட்டமும் இல்லை...
திரிஷா இந்த படத்தில் தமிழ் பேசி நடிக்கவும் செய்கின்றார்...கமல் திரிஷாவுக்கு பெரிய நெருக்கமான காட்சிகள் இல்லை...
வீரத்துக்கு உச்சகட்டம் அஹிம்சை போன்ற இன்டலெக்சுவல் டயலாக்குகள் படம் முழுவதும் விரவி கிடக்கின்றன...
கமலுக்கு திரிஷாவுக்குமான காதலின் அழுத்தத்தை சொல்லும் அந்த கவிதை சொல்லும் காட்சி தூக்கபட்டு விட்டது.. அதனால் அந்த காதல் அழுத்தம் இன்னும் தேவையாக இருக்கின்றது...
ஒளிப்பதிவு...மனுஷ்நந்தன்.. எழுத்தாளர் ஞானி அவர்களின் பையன்.. இவர் ரவிகே சந்திரனிடம் தொழில் பயின்றவர்.,.ரிவர்சாங்கில் நல்ல ஒர்க்... பாரினில் திரையில் முழு சுவரும் தெரியும் படி சின்ன கேப்பில் மட்டும் தெரு தெரிவது போல ஒரு ஷாட் அதில் ஒரு வெள்ளைகாரர் நடந்து போவது போல இருக்கும் அந்த ஷாட் அருமை ..
இந்த படம் ரொமான்டிக் காமெடிபடம்...
திரிஷாவின் கண்களில் மென்சோகம் எனக்கு பிடிக்கும். அது இந்த படம் முழுக்க தெரிகின்றது.. சங்கீதா திருமணத்துக்கு பின் நல்ல வெயிட் போட்டு இருப்பது வயிற்று தொப்பை தெரியவைக்கின்றது..
கமலோடு ஜோடி போடும் அந்த வெள்ளைக்கார பெண் மிக அழகாக இருக்கின்றார்.. பட் டயலாக் இல்லாமல் நடித்து இருக்கின்றார்..
மாதவன் நெகட்டிவ் ரோல் ரொம்ப அற்புதமாக செய்து இருக்கின்றார்.. மிக முக்கியமாக தண்ணி அடித்து விட்டு பேசுவது போவான காட்சிகளில் மேடி கனக்கச்சிதம்... உஷா உதுப், ஓவியா, எனதலைகாட்டும் நபர்கள் குறைவு..
இந்த கேஎஸ்ரவிக்குமார் முதல் காட்சியிலேயே தொழில் நிமித்தமாக தலை காட்டிவிடுவதால் படம் முடியும் போது கடைசி காட்சியில் மிஸ்சிங்..
தேவிஸ்ரீபிரசாத்.. ஒரு பாடலில் கித்தார் மீட்டிய படி வருகின்றார்...
கமல் அனைத்து பாடலையும் எழுதிஇருக்கின்றார்.. நீ நீலவானம்... சாங் இப்போது என் பேவரிட்...
ரமேஷ் அர்விந் ஊர்வசி இருக்கின்றார்கள். ரமேஷ் அரவிந்தா என்று ஆச்சர்யபடுவது போல நடித்து இருக்கின்றார்..
படத்தில் பல காட்சிகள் கிச்சு கிச்சு மூட்டுகின்றன... மலையாளியாக வரும் கேரக்டர் வரும் போது எல்லாம் எரிச்சல் வருகின்றது..
இந்த படம் நாடகம் போல ரிகர்சல் செய்து விட்டு எடுத்த படம்..படத்தின் பிரேம்களில் ரிச்நெஸ் தெரிகின்றது..
ஒரே ஒரு சண்டைக்காட்சிதான் என்றாலும் அதை ரசிக்கும் வகையில் எடிட் செய்யது இருக்கின்றார்கள்..
வழக்கமான கேஸ்ரவிக்குமாரின் டிரேட் மார்க் சிரிப்பு படம்.
பைனல் கிக்..
மனசு விட்டு சிரித்து வர பார்த்து விட்டு வரலாம்..
No comments:
Post a Comment